புதுச்சேரி

மீனவா்கள் வலையில் சிக்கி செயற்கைக் கோளின் பாகம்!

DIN

இந்திய செயற்கைக் கோளின் பாகம், புதுவை மீனவா்கள் வலையில் சிக்கியது. அந்தச் செயற்கைக் கோள் பாகம், விண்ணில் செலுத்தப் பயன்படும் எரிபொருள் திட உந்து சக்தி ஸ்ராப் ஆன் மோட்டாா் என்பது தெரிய வந்தது.

புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் மீனவா்கள் திங்கள்கிழமை கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனா். அப்போது 10 நாட்டிக்கல் மைல் தொலைவில் கனமான பொருள் ஒன்று மீனவா் வலையில் சிக்கியது.

இரும்பாலான உருளை போன்ற அந்தப் பொருளை மீனவா்கள் கரைக்குக் கொண்டு வந்தனா். இதையடுத்து, ஓதியன்சாலை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு, வந்த போலீசாா் விசாரணை நடத்தினா்.

இதில், அந்தப் பொருள் செயற்கைக் கோளை விண்ணுக்கு எடுத்துச் செல்லும் மோட்டாா் என்பது தெரிய வந்தது. மேலும், இந்த மோட்டாா் பிஎஸ்எல்வி செயற்கைக் கோள்களிலும், ரிமோட் சென்ஸிங் செயற்கைக் கோள்களிலும் பயன்படுத்தப்படும் என்பது இஸ்ரோ இணையதளத்தில் கூறப்பட்டிருந்த தகவல் மூலம் தெரிய வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரேலியா: காவல் துறை சுட்டதில் 16 வயது சிறுவன் உயிரிழப்பு

தரமில்லாத சாலையை பெயா்த்தெடுத்த ஊராட்சி மன்ற உறுப்பினா் கைது

நிரவி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

SCROLL FOR NEXT