முகப்பு
புதுச்சேரி

டிச.26ல் சூரிய கிரகணம்: புதுச்சேரி அறிவியல் கோளரங்கில் செயல் விளக்கம்

டிசம்பர் 26 அன்று நிகழ உள்ள நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை பார்க்கும் முறை குறித்த செயல் விளக்கம் புதுச்சேரி அறிவியல் கோளரங்கில் நடைபெற்றது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:32 PM
பகிர்:

டிசம்பர் 26 அன்று நிகழ உள்ள நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை பார்க்கும் முறை குறித்த செயல் விளக்கம் புதுச்சேரி அறிவியல் கோளரங்கில் நடைபெற்றது.

சூரியனுக்கும், பூமிக்கும் நடுவில் வரும் சந்திரன், சூரியனை முழுமையாக மறைத்து, நிலவின் ஒளி பூமி மீது படும் நிகழ்வை சூரிய கிரகணம் என்கிறோம். நிலவு சூரியனை முழுமையாக மறைத்தால்  அது 'முழு சூரிய கிரகணம்' என்றும் அதுவே, பகுதி அளவு மறைத்தால் 'பகுதி சூரிய கிரகணம்' என்றும் சூரியனை முழுமையாக மறைக்காமல், சூரியனின் வெளி விளிம்புப் பகுதி ஒரு நெருப்பு வளையம் போல காட்சி அளித்தால், அது நெருப்பு வளைய சூரிய கிரகணம் (கங்கண சூரிய கிரகணம்) என்றும் அழைக்கிறோம். 

இதில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் வருகிற டிசம்பர் 26 அன்று நிகழ உள்ளது. இதைப் பாதுகாப்பாக பார்க்கும் முறைகள் குறித்த செயல் விளக்கம் லாஸ்பேட்டை கோளரங்கில் நடைபெற்றது. இதில் வளைய வடிவ சூரிய கிரகணம் நடைபெறும் பாங்கு, எளிய உபகரணங்களைப் பயன்படுத்தி சூரிய கிரகணத்தைப் பாதுகாப்பாக பார்க்கும் முறைகள் குறித்து மக்களுக்கு  விளக்கப்பட்டது. மாயக் கண்ணாடி, பந்துக் கண்ணாடி, நிலவின் முகம், நுண்ணிய சூரிய குடும்பம்,  நிறமாலை மானி, சூரியக் கண்ணாடி ஆகிய உபகரணங்கள் மூலமாக விளக்கம் கொடுக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →