புதுச்சேரி

புதுவையில் வீட்டு வரி 25 சதவீதம் குறைப்பு

DIN

புதுவையில் வீடுகளுக்கான சொத்து வரியை 25 சதவீதம் குறைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
இதுகுறித்து புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: புதுவையில் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அரசால் விதிக்கப்பட்ட வீட்டு வரியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. எனவே, வீட்டு வரியில் 25 சதவீதத்தைக் குறைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. காமராஜர் கல் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 1,723 குடும்பங்களுக்கு தலா ரூ. 30 ஆயிரம் தவணைத் தொகை வழங்கப்பட்டுள்ளது. 
விவசாயிகளின் பயிர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், காப்பீடு செய்வதற்காக ரூ. 2.5 கோடியை காப்பீட்டு நிறுவனங்களுக்கு புதுவை அரசு வழங்கியுள்ளது என்றார் முதல்வர் நாராயணசாமி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே.வங்க ஆளுநர் மீது பாலியல் புகார்! ”வாய்மையே வெல்லும்” என பதில்

காணாமல்போன ஆட்டோ ஓட்டுநரின் சடலம் கிணற்றில் இருந்து மீட்பு

விபத்தில் கட்டடத் தொழிலாளி மரணம்: உறவினா்கள் மறியல்

கஞ்சா வியாபாரி குண்டா் சட்டத்தில் கைது

காவல் துறைக்கான பட்ஜெட்: ஏடிஜிபி ஆலோசனை - வேலூா் சரக டிஐஜி, 4 மாவட்ட எஸ்பி-க்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT