புதுச்சேரி

பொதுப் பணித் துறை ஒப்பந்ததாரர்கள் ஆர்ப்பாட்டம்

DIN

புதுச்சேரி கட்டுமானர்கள் சமுதாய முன்னேற்றச் சங்கம் சார்பில், பொதுப் பணித் துறையில் நிலுவையில் உள்ள தொகையை வழங்கக் கோரி, ஒப்பந்ததாரர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளர் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு 
அந்தச் சங்கத்தின் தலைவர் 
எம்.முத்து தலைமை வகித்தார். சங்கச் செயலர் எச்.எழிலன், பொருளாளர் எஸ்.செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, புதுவை பொதுப் பணித் துறையில் கடந்த 3 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்காக ஒப்பந்ததாரர்களுக்கு ரூ. 250 கோடி வழங்கபடாமல் உள்ளது. இது தொடர்பாக முதல்வர், பொதுப் பணித் துறை அமைச்சருக்கு கடிதம் அளித்ததன் பேரில், தலைமைப் பொறியாளரிடம் ரூ. 122 கோடிக்கு கோப்பு தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டது. ஆனால், நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் பொங்கலுக்குள் நிலுவைத் தொகையை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரையும் தொகை வழங்கப்படவில்லை.  எனவே, 
நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் 
வலியுறுத்தப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்?

பர்மா - ஓர் அரசியல் வரலாறு

விழிகளில் ஒளியேற்றும் சங்கர நேத்ராலயா

SCROLL FOR NEXT