புதுச்சேரி

சுகாதாரமான குடிநீரை வழங்க திமுக கோரிக்கை

DIN


புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதியில் சுகாதாரமான குடிநீரை வழங்க வேண்டும் என்று அந்தத் தொகுதி திமுக எம்.எல்.ஏ. இரா.சிவா கோரிக்கை விடுத்தார்.
புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்கு உள்பட்ட ராஜா நகர், முத்தமிழ் நகர், அருந்ததிபுரம், சுப்பையா நகர், சாந்தி நகர், இளங்கோ நகர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுப் பணித் துறையின் குடிநீர் பிரிவு மூலம் விநியோகிக்கப்படும் குடிநீர் மாசுபடிந்தும், உப்புநீர் கலந்தும் வருவதாக அந்தப் பகுதி மக்கள் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சிவாவிடம் புகார் அளித்தனர்.
இதையடுத்து, புகார் தெரிவிக்கப்பட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு செய்த சட்டப்பேரவை உறுப்பினர் சிவா, குடிநீரில் உப்பு கலந்து வருவதை உறுதி செய்தார். பின்னர், வெள்ளிக்கிழமை மாலை அந்தப் பகுதியில் பணியாற்றும் தமது ஆதரவாளர்களுடன் பொதுப் பணித் துறை குடிநீர் கோட்டப் பிரிவு தலைமைச் செயற்பொறியாளர் கன்னியப்பனை சந்தித்து, உருளையன்பேட்டை தொகுதியில் குடிநீர் சுகாதாரமற்ற நிலையில் வருவதாக முறையிட்டார்.
இதற்குப் பதிலளித்த செயற்பொறியாளர் உருளையன்பேட்டை தொகுதியில் புதிதாக இரண்டு ஆழ்துளை கிணறுகள் அமைத்து, சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். 
மேலும், இந்தப் பணிகளை விரைந்து முடிக்குமாறு இளநிலைப் பொறியாளர் ராஜேந்திரனுக்கு அவர் உத்தரவிட்டார்.
இந்தச் சந்திப்பின் போது, உருளையன்பேட்டை தொகுதியைச் சேர்ந்த சக்திவேல், பிரபாகரன் சாஸ்திரி, ஐசக், முத்து, விஜயகுமார், வெங்கட், ரபீக், கந்தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT