புதுச்சேரி

பாவேந்தர் பாரதிதாசன் கவியரங்கம்: பிப். 5-க்குள் பெயரைப் பதிவு செய்யலாம்

DIN

 புதுச்சேரி பாவேந்தர் பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் நடைபெற உள்ள கவியரங்கில் பங்கேற்க பிப். 5-ஆம் தேதிக்குள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.
புதுச்சேரி பெருமாள் கோயில் தெருவில் உள்ள பாவேந்தர் பாரதிதாசன் அரசு அருங்காட்சியகத்தில் இலக்கியத் திங்கள் விழா பிப். 10-ஆம் தேதி காலை 10.15 முதல் 12.15 மணி வரை வரை நடைபெற உள்ளது.
விழாவில், தாய்மொழியும் பாவேந்தரும் என்ற தலைப்பில் பாரதிதாசன் அறக்கட்டளை தலைவர் கவிஞர் கோ.பாரதி உரையாற்றுகிறார். தொடர்ந்து, தாழ்ந்திடு நிலையினில் உனை விடுப்பேனோ என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெற உள்ளது. உலகத் தாய்மொழி நாளை (பிப். 21) முன்னிட்டு இந்தக் கவியரங்கம் நடைபெறுகிறது. பாவேந்தர் பாரதிதாசன் கவிதை வரியில் அமைந்த இந்தத் தலைப்பில், 16 வரிகள் கொண்ட தங்களது கவிதையை மேடையில் வாசிக்கலாம். புதுவை அல்லாத பிற ஊரைச் சேர்ந்தவர்கள் கவியரங்கில் பங்கேற்க விரும்பினால் பிப். 5-ஆம் தேதிக்குள் தங்களது விவரங்களை அஞ்சல் வழியாக கலைமாமணி கோ.பாரதி, தலைவர் பாரதிதாசன் அறக்கட்டளை, 4-முதல் தெரு, காந்தி நகர், புதுச்சேரி - 695 009 என்ற முகவரியில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT