பார்வைக் குறைபாடு உடையோருக்கு கண்ணாடி
தேசிய கண் பார்வை இழப்பு தடுப்புத் திட்டத்தின் மூலம் புதுச்சேரியில் பார்வைக் குறைபாடுடையோருக்கு இலவசமாக கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன.
தேசிய கண் பார்வை இழப்பு தடுப்புத் திட்டத்தின் மூலம் புதுச்சேரியில் பார்வைக் குறைபாடுடையோருக்கு இலவசமாக கண்
கண்ணாடிகள் வழங்கப்பட்டன.
தேசிய கண் பார்வை இழப்பு தடுப்புத் திட்டத்தின் மூலம் உலக கண் பார்வை பராமரிப்பு மாதத்தை முன்னிட்டு, கண் பரிசோதனை முகாம் குயவர்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உள்பட்ட அருந்ததி நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், புதுச்சேரி திட்ட அலுவலர் மருத்துவர் தணிகாசலம் வழிகாட்டுதலின்படி, பார்வைக் குறைபாடு உடையோர் கண்டறியப்பட்டு, இலவச கண் கண்ணாடி வழங்குவதற்காக தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு இலவச கண் கண்ணாடி வங்கும் நிகழ்ச்சி அருந்ததி நகர் அங்கன்வாடி மையத்தில் நடைபெற்றது. கண் தொழில்நுட்ப உதவியாளர்
சரவணன் வரவேற்றார்.
சுகாதார ஆய்வாளர் யசோதா முன்னிலை வகித்தார். மருத்துவ அதிகாரி அஜ்மல் கண் பார்வையின் முக்கியத்துவம் மற்றும் கண் பராமரிப்பு குறித்துப் பேசியதுடன், பார்வைக் குறையுடையோருக்கு இலவச கண் கண்ணாடிகளை வழங்கினார்.
சுகாதார உதவி ஆய்வாளர் அய்யனார் கண் தானத்தின் முக்கியத்துவம் குறித்துப் பேசினார். நிகழ்ச்சி நிறைவில் பொதுமக்கள் கண்தான உறுதிமொழி ஏற்றனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை அங்கன்வாடி ஊழியர்கள் செய்திருந்தனர்.