புதுச்சேரி

வீட்டுமனைப் பட்டா வழங்காததைக் கண்டித்து ஆதிதிராவிடர் நலத் துறை அலுவலகம் முற்றுகை

DIN

இலவச வீட்டுமனைப் பட்டா வழங்காததைக் கண்டித்து, புதுச்சேரி தட்டாஞ்சாவடி ஆதிதிராவிடர் நலத் துறை அலுவலகத்தை எம்.எல்.ஏ. தலைமையில் பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதியில் ஆதிதிராவிடர் நலத் துறை மூலம் செயல்படுத்தப்பட வேண்டிய இலவச வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
 இதுதொடர்பாக அந்தப் பகுதி மக்கள் தொகுதி எம்.எல்.ஏ.வான வையாபுரி மணிகண்டனிடம் (அதிமுக) முறையிட்டனர்.
 இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எம்.எல்.ஏ. பலமுறை தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
 இதனால், அந்தப் பகுதி மக்கள், வையாபுரி மணிகண்டன் எம்எல்ஏ தலைமையில் திங்கள்கிழமை தட்டாஞ்சாவடியில் உள்ள ஆதிதிராவிடர் நலத் துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 அப்போது, மதுரவீரன் கோயில் தோப்பில் வசிக்கும் 90-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரியும், மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக ரூ. ஒரு கோடி மதிப்பில் தொகுதியில் ஆதிதிராவிடர் நலத் துறை சார்பில் அடிக்கல் நாட்டப்பட்ட பணிகளை உடனே தொடங்காத அதிகாரிகளைக் கண்டித்து அவர்கள் முழக்கமிட்டனர்.
 தகவலறிந்து அங்கு வந்த ஆதிதிராவிடர் நலத் துறை இயக்குநர் ரகுநாதன், போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ. மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், வருகிற பட்ஜெட்டில்
 மேற்கண்ட கோரிக்கை கள் அனைத்தும் சேர்க்கப் பட்டு நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார். இதை யேற்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனுஷ்கோடியில் கடல் சீற்றம்

தனி பட்டா வழங்க லஞ்சம்: நில அளவையா் கைது

காவலரைத் தாக்கிய இளைஞா் கைது

தனியாா் மருத்துவமனையில் சிகிச்சையின்போது மூதாட்டி உயிரிழப்பு: உறவினா்கள் போராட்டம்

ஆயுதங்களுடன் சுற்றிய நால்வா் கைது

SCROLL FOR NEXT