புதுச்சேரி

பிராந்திய ஒதுக்கீட்டை  ரத்து செய்ய திமுக கோரிக்கை

புதுவையில் பிராந்திய ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக வலியுறுத்தியது.

DIN

புதுவையில் பிராந்திய ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக வலியுறுத்தியது.
நெல்லித்தோப்பு தொகுதி இளைஞரணி, மாணவரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு புதுவை தெற்கு மாநில திமுக அமைப்பாளர் இரா.சிவா தலைமை வகித்தார். தொகுதி செயலர் செ.நடராஜன், மாநில மாணவரணி அமைப்பாளர் எஸ்.பி.மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொகுதி இளைஞரணி அமைப்பாளர் சந்துரு, மாணவரணி அமைப்பாளர் சந்திரசேகர் ஆகியோர் வரவேற்றனர்.
கூட்டத்தில் உயர் கல்வியில் பிராந்திய இட ஒதுக்கீட்டில் சென்டாக் பட்டியலில் புதுவை பிராந்தியம் பின்தங்கி உள்ளது. இட ஒதுக்கீட்டில் புதுவை பகுதிக்கு 75 %, காரைக்காலுக்கு 
18 %, மாஹேவுக்கு 4 %, ஏனாம் பகுதிக்கு 3 % என உள்ளது. இதில், புதுச்சேரி பகுதிக்கு ஒதுக்கப்பட்ட75 சதவீதத்தில் இருந்து காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதி மாணவர்கள் இடங்களை பெற முடியும். ஆனால், காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் ஓர் இடத்தைக்கூட புதுவை பிராந்திய மாணவர்கள் பெற முடியாது.  இதை மாற்றியமைக்க வேண்டும்.
உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு சமூக நீதிக்கு எதிரானது. எனவே, அதை புதுவையில் அமல்படுத்தக் கூடாது. தமிழகம், புதுவைக்கு நீட் தேர்வில் விலக்களிக்க வேண்டும். ஹிந்தி திணிப்பைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.2000 கோடி! 850 ஆளில்லா விமானங்களை வாங்க இந்திய ராணுவம் திட்டம்!

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்குகள் 4% உயர்வு!

இவ்வளவு நபர்கள் முகவரி இல்லாமல் இருந்திருக்கிறார்களா? ப.சிதம்பரம்

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!

தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

SCROLL FOR NEXT