புதுச்சேரி

நிலுவை ஊதியம் வழங்கக் கோரி பஞ்சாலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

DIN

நிலுவை ஊதியத்தை வழங்க வலியுறுத்தி, புதுவை ஏஎப்டி, சுதேசி, பாரதி பஞ்சாலை தொழிலாளர்கள் புதுச்சேரியில் புதன்கிழமை கருப்பு கொடிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 புதுச்சேரியில் இயங்கி வரும் சுதேசி மற்றும் பாரதி பஞ்சாலையில் தொழிலாளர்களுக்கு எட்டு மாதங்களாக வழங்கப்படாத நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்,
 2018-ஆம் ஆண்டுக்கான போனûஸ உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பஞ்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சுதேசி பஞ்சாலை எதிரே ஊழியர்கள் உடனடியாக நிலுவை ஊதியம், போனஸ் ஆகியவற்றை வழங்கக் கோரியும், மக்களவைத் தேர்தலில் வாக்களிக்காமல் தேர்தலைத் புறக்கணிக்கப் போவதாகக் கூறியும் கருப்புக் கொடிகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் ஆளுநர் கிரண் பேடி, புதுவை மாநில அரசைக் கண்டித்தும், ஏற்கெனவே ஆட்சி செய்த என்.ஆர்.காங்கிரûஸ கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.
 மேலும் தங்களுக்கு ஊதியம் வழங்கும் வரை தொடர்ந்து பல்வேறு கட்டப் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

SCROLL FOR NEXT