நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி, புதுச்சேரி ஏஎப்டி, சுதேசி, பாரதி பஞ்சாலைத் தொழிலாளர்கள் வியாழக்கிழமை பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த பஞ்சாலைகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கடந்த 8 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதைக் கண்டித்து மார்ச் 12-ஆம் தேதி முதல் தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், புதுச்சேரி சுதேசி பஞ்சாலை முன்பு வியாழக்கிழமை பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் பல்வேறு தொழில்சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கிருஷ்ணன் (ஐஎன்டியுசி), கோபிகா (சிஐடியூ), பரமேஸ்வரன் (என்.ஆர்.டி.யு.சி.), பழனிச்சாமி (தொமுச), கிருஷ்ணன் (அண்ணா தொழிற்சங்கம்) உள்ளிட்டோர் பங்கேற்றனர். போராட்டத்தின்போது தொழிற்சங்க நிர்வாகிகள் தங்களது கைகளில் தட்டுகளை ஏந்தி பிச்சை எடுத்தபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.