புதுச்சேரி

பாகூர்: வேன் கவிழ்ந்ததில் 20 பேர் காயம்

DIN

பாகூர் அருகே செவ்வாய்க்கிழமை பிற்பகலில் மினி வேன் கவிழ்ந்ததில் 20 பேர் காயமடைந்தனர்.
 பாகூர் அருகே உள்ள இரண்டாயிரம் விளாகம் கிராமத்திலிருந்து செவ்வாய்க்கிழமை காலை பெண்கள் உள்பட 30 பேர் மினி வேனில் துக்க நிகழ்வில் பங்கேற்பதற்காக பரிக்கல்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்தனர். வேனை கீழ்பரிக்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த சுரேந்திரதாஸ் (38) ஓட்டிச் சென்றார்.
 சித்தேரி அணைக்கட்டு அருகே அழகியநத்தம் - குருவிநத்தம் சாலையில் பிற்பகலில் வேன் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் பயணித்த ஓட்டுநர் சுரேந்திரதாஸ் மற்றும் 10 பெண்கள் உள்பட 20 பேர் காயமடைந்தனர். இதைப் பார்த்த அந்தப் பகுதியினர், காயமடைந்தவர்களை மீட்டு, அருகில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதித்தனர். மேலும், பாகூர் போலீஸாருக்கும் தகவல் அளித்தனர்.
 இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த புதுச்சேரி தெற்கு போக்குவரத்து போலீஸார், கவிழ்ந்து கிடந்த வேனை மீட்டு, அந்தப் பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT