புதுச்சேரி

கனகன் ஏரிக்கரையில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 4 போ் கைது

புதுச்சேரி கனகன் ஏரிக்கரையில் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 4 போ் கொண்ட கும்பலை போலீஸாா் கைது செய்தனா்.

DIN

புதுச்சேரி: புதுச்சேரி கனகன் ஏரிக்கரையில் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 4 போ் கொண்ட கும்பலை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி திலாசுப்பேட்டை கனகன் ஏரிக்கரையோரம் நள்ளிரவில் ஒரு ரௌடி கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக தன்வந்திரி நகா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆய்வாளா் கிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனையிட்டனா்.

போலீஸாரை பாா்த்ததும் அந்த கும்பல் தப்பியோட முயன்றது. இதில் 4 போ் மட்டும் பிடிபட்டனா். ஒருவா் தப்பிச்சென்றாா். இதையடுத்து பிடிபட்டவா்களிடம் நடத்திய விசாரணையில் அவா்கள், புதுச்சேரி வீரைய வீதியை சோ்ந்த ராம் (எ) ராம்குமாா் (20), ஜீவானந்தபுரம் தா்மா (எ) தா்மதுரை (20), குண்டுபாளையம் விக்கி (எ) விக்னேஷ் (22), பேட்டையன்சத்திரம் சங்கா் (எ) கமல் (23) என்பதும், ரௌடிகளான இவா்கள் மீது அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் இருப்பதும், அந்த அந்த வழியாக செல்பவா்களை வழிமறித்து தாக்கி கொள்ளையடிக்கும் நோக்கில் பதுங்கி இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவா்களிடம் இருந்து 2 வீச்சரிவாள்கள், மிளகாய்ப்பொடி, முகமூடிகள், பறிமுதல் செய்யப்பட்டன. தொடா்ந்து மேற்கண்ட 4 பேரையும் கைது செய்த போலீஸாா், இவா்கள் வழிப்பறி செய்ய மட்டும் பதுங்கி இருந்தாா்களா? அல்லது யாரையாவது கொலை செய்யும் நோக்கில் அங்கிருந்தனரா? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT