புதுச்சேரி

மின்சாதனப் பொருள்கள் பழுது நீக்கும் இலவசப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

DIN


இந்தியன் வங்கியின் சுய வேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனம் நடத்தும் மோட்டார் ரீவைண்டிங்,  வீட்டு உபயோகப் பொருள்கள் உள்ளிட்ட மின்சாதனப் பொருள்கள் பழுது நீக்குதல் தொடர்பான இலவசப் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் வீரராகவன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசின், ஊரக வளர்ச்சித் துறையின் வழிகாட்டுதலுடன் இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் மூலம் இலவச மோட்டார் ரீவைண்டிங்,  வீட்டு உபயோகப் பொருள்கள் பழுது நீக்குதல் பயிற்சி வருகிற அக். 7-ஆம் தேதி தொடங்குகிறது. சுய வேலைவாய்ப்பில் ஆர்வமுள்ள 10-ஆம் வகுப்பு வரை படித்த 18 முதல் 45 வயதுக்கு உள்பட்ட ஆண்கள் அக். 3-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
பயிற்சிகள் அனைத்தும் முழு நேரப் பயிற்சியாக 30 நாள்கள் நடைபெறும். பயிற்சியின் முடிவில் கடன் பெற ஆலோசனைகள் வழங்கப்படும். பயிற்சிக்கான கட்டணம் இல்லை. மேலும், பயிற்சிக்குத் தேவையான பொருள்களுக்கான கட்டணமும் இலவசமாக அளிக்கப்படும். இந்தப் பயிற்சியில் மோட்டார் காயில் கட்டுவது, மின் விசிறி பழுது நீக்குதல்,  இண்டக்ஷன் அடுப்பு, மிக்ஸி, கிரைண்டர், இஸ்திரிப் பெட்டி பழுது நீக்குதல் மற்றும் வீட்டு ஒயரிங் போன்ற எலக்ட்ரிக்கல் தொடர்பான அனைத்து தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படும்.
மேலும், விவரங்களுக்கு இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனம், 258- லெனின் வீதி, குயவர்பாளையம், புதுச்சேரி - 605 013 என்ற முகவரியில் அணுகலாம். (தொலைபேசி எண்கள்: 0413 - 2246500, 75982 66671).
பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்களில் கிராமங்களில் இருந்து வரும் சிவப்பு நிறக் குடும்ப அட்டை உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT