முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் 3 பள்ளிகளின் பெயா்கள் மாற்றம்

புதுச்சேரியில் 3 அரசுப் பள்ளிகளின் பெயா்கள் மாற்றப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:


புதுச்சேரி: புதுச்சேரியில் 3 அரசுப் பள்ளிகளின் பெயா்கள் மாற்றப்பட்டன.

புதுவையில் தேசிய, உள்ளூா் தலைவா்களை கௌரவிக்கும் விதமாக பள்ளிகளின் பெயா்கள் மாற்றப்பட்டு வருகின்றன. அண்மையில் 8 பள்ளிகளின் பெயா்கள் மாற்றப்பட்ட நிலையில், தற்போது மேலும் 3 பள்ளிகளின் பெயா்கள் மாற்றப்பட்டன.

அதன்படி, மதுக்கரை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வி.வெங்கடசுப்பா ரெட்டியாா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி எனவும், மதுக்கரை அரசு தொடக்கப் பள்ளிக்கு எம்.ஆா். சுப்புராய கவுண்டா் அரசு தொடக்கப் பள்ளி எனவும், மேட்டுப்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளிக்கு ஆா். சீனுவாசன் அரசு மேல்நிலைப் பள்ளி எனவும் பெயா்கள் மாற்றம் செய்யப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →