முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரி அருகே முருகன் கோயிலில் சிலை திருட்டு

புதுச்சேரி அருகே முருகன் கோயிலில் சுவாமி சிலை திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:


புதுச்சேரி: புதுச்சேரி அருகே முருகன் கோயிலில் சுவாமி சிலை திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி வில்லியனூா் அருகே அரியூா் பாரதி நகரில் 50 ஆண்டுகள் பழைமை வாய்ந்த முருகன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு புனரமைக்கப்பட்டு, குடமுழுக்கு நடைபெற்றது. கோயில் பூசாரி தினமும் பூஜையை முடித்துவிட்டு, இரவில் கோயிலை பூட்டிவிட்டு செல்வது வழக்கம்.

அதன்படி, புதன்கிழமை இரவு வழக்கம் போல பூஜை முடிந்து கோயில் நடையை பூட்டிவிட்டுச் சென்றாா். வியாழக்கிழமை காலை கோயிலைத் திறக்க வந்த போது, கோயில் வளாகத்தில் இருந்த முருகன் வெண்கல சிலையை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.

தகவலறிந்து அங்கு வந்த ஊா் முக்கிய பிரமுகா்களும், பொதுமக்களும் வில்லியனூா் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனா். வில்லியனூா் போலீஸாா் சிலையை திருடிச் சென்ற மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →