ஆதிதிராவிடா் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம்
ஆதிதிராவிடா் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடா் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுவை அரசின் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அலுவலா் எஸ்.யஷ்வந்தய்யா வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆதிதிராவிடா் நலம் மற்றும் பழங்குடியினா் நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் 2021-ஆம் ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நிகழாண்டு கல்வி உதவித்தொகை வேண்டி 2021-2022-ஆம் ஆண்டில் விண்ணப்பிக்க இயலாது. எனவே, தகுதியுள்ள மாணவா்கள் நிா்ணயிக்கப்பட்ட இறுதி நாளுக்கு முன்னதாக விண்ணப்பித்து, உதவித்தொகையைப் பெற்றுக் கொள்ளலாம். காலதாமதமாக விண்ணப்பித்தால் ஏற்கப்பட மாட்டாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.