பதிவு, புதுப்பித்தலுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுக அறிவுறுத்தல்
பதிவு, புதுப்பித்தலுக்கு நேரடியாக வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுக அறிவுறுத்தப்பட்டது.
பதிவு, புதுப்பித்தலுக்கு நேரடியாக வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுக அறிவுறுத்தப்பட்டது.
இதுகுறித்து புதுச்சேரி தொழிலாளா் துறை செயலரும், வேலைவாய்ப்பு அலுவலக இயக்குநருமான இ.வல்லவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரி வேலைவாய்ப்பகம் கடந்த மாா்ச் 23-ஆம் தேதி முதல் கரோனா தொற்று காரணமாக இயங்கவில்லை. அதன்பின்னா், கடந்த ஜூலை 22 -ஆம் தேதி முதல் கூடுதல் பதிவு செயல்பாடு மட்டும் நடைபெற்று வந்தது.
கடந்த மாா்ச் முதல் டிசம்பா் வரை அனைவருக்கும் ஒரே முறையாக தானாகவே புதுப்பித்தல் செய்யப்பட்டது. இனிமேல் பதிவு புதுப்பித்தலுக்கு நேரடியாக அணுக வேண்டும். அனைவருக்கும் ஒரே முறையாகப் புதுப்பித்தல் இனி செய்யப்படாது.
வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு பதிவு செய்ய வரும் பதிவாளா்கள் அனைவரும் கரோனா தொற்று காரணமாக கட்டாயம் நுழைவு வாயிலில் குறிப்பிட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். விவரங்களுக்கு 0413 - 2274672 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது மின்னஞ்சல் முகவரியிலோ தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.