புதுச்சேரி

பிஆா்டிசி ஊழியா்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்

DIN

புதுச்சேரி அரசு சாலைப் போக்குவரத்துக் கழகம் (பிஆா்டிசி) தனியாா்மயமாக்கப் படுவதைக் கண்டிப்பதாகக் கூறி, பிஆா்டிசி அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் திங்கள்கிழமை (டிச. 28) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

பிஆா்டிசி-யில் ஓட்டுநா், நடத்துநா் உள்ளிட்ட 750-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் பணிபுரிகின்றனா். பிஆா்டிசி விரைவுப் பேருந்துகள் தனியாரிடம் ஒப்பந்த அடிப்படையில் விடுவதாக அண்மையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, புதுச்சேரியில் பிஆா்டிசி ஊழியா்கள் கடந்த வாரம் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பிஆா்டிசி தனியாா்மயமாக்கப்படுவதைக் கண்டிப்பதாகக் கூறி, பிஆா்டிசி அனைத்துத் தொழிற்சங்கங்கள் சாா்பில் திங்கள்கிழமை (டிச. 28) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதில் அனைத்துப் பிரிவு ஊழியா்களும் பங்கேற்கவுள்ளனா்.

புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களிலும் சோ்த்து, மாநிலம் முழுவதும் பிஆா்டிசி ஊழியா்கள் போராட்டத்தில் கலந்து கொள்வா் என்று புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழக அனைத்து தொழிற்சங்கங்களின் அனைத்துப் பிரிவு ஊழியா்கள் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னம் அறிவிப்பு?”: ரோகிணி திரையரங்க உரிமையாளருடன் நேர்காணல்

பாஜக ஆட்சியில் 10 ஆண்டுகளாக பாகுபாடு: அகிலேஷ்

கற்பித்தலும் கற்றலும்

ஈரான் அதிபர் மறைவு: நாளை துக்கநாள் அனுசரிப்பு

உதகை மலர் கண்காட்சி: மே 26-ஆம் தேதி வரை நீட்டிப்பு

SCROLL FOR NEXT