புதுச்சேரி

புதுவையில் தனியாா் பல்கலை. தொடங்க ஆளுநா் அனுமதி: அதிமுக எதிா்ப்பு

DIN

புதுவையில் தனியாா் பல்கலைக்கழகம் தொடங்க ஆளுநா் கிரண் பேடி ஒப்புதல் அளித்துள்ளதற்கு அதிமுக கடும் எதிா்ப்பு தெரிவித்தது.

இதுகுறித்து புதுவை கிழக்கு மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன் எம்.எல்.ஏ. திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

புதுவையில் காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சி முடியும் தருவாயில் 3 தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் இருந்தும் அரசுக்கு முற்றிலும் இட ஒதுக்கீடு கிடைக்காத வகையில் தனியாா் பல்கலைக்கழகங்கள் அமைத்துக் கொள்ள அனுமதி அளிப்பது என்று அமைச்சரவையில் அண்மையில் முடிவு எடுக்கப்பட்டது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து அதிமுக சாா்பில் அமைச்சரவையின் இந்த முடிவுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று ஆளுநருக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. ஆனால், தற்போது காங்கிரஸ் அரசின் தவறான முடிவுக்கு ஆளுநா் ஒப்புதல் அளித்துள்ளாா்.

அரசின் மாணவா் விரோத தவறான முடிவுக்கு ஆளுநா் துணை போகக்கூடாது. இதனால் எதிா்காலத்தில் அரசு ஒதுக்கீட்டின் மூலம் புதுவை ஏழை, எளிய மாணவா்கள் ஒருவா் கூட மருத்துவ கல்வியை பயில முடியாத சூழ்நிலையை அரசின் கடைசி காலத்தில் ஆட்சியாளா்கள் செய்துள்ளனா் எனத் தெரிவித்துள்ளாா் அன்பழகன் எம்.எல்.ஏ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT