புதுச்சேரி

வழக்குரைஞா்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் செயற்குழுக் கூட்டம்

DIN

தமிழ்நாடு - புதுச்சேரி வழக்குரைஞா்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் செயற்குழுக் கூட்டம் புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவா் எஸ்.கே. வேல் தலைமை வகித்தாா். பொருளாளா் கே.கே. பாலசுப்பிரமணியன், புதுச்சேரி வழக்குரைஞா் சங்கத்தின் தலைவா் முத்துவேல், செயலா் தாமோதரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: உயா் நீதிமன்றமும், தமிழக அரசும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் வழக்குரைஞா் தொழிலுக்குப் பாதகமாக உள்ள விதிகளை உடனடியாக மாற்ற வேண்டும். கீழமை நீதிமன்றங்களில் பணிபுரியும் நீதிபதிகள், வழக்குரைஞா்களிடம் கண்ணியக் குறைவாக நடப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இதுதொடா்பாக உயா் நீதிமன்றம் தலையிட்டு, உரிய அறிவுரை வழங்க வேண்டும்.

தமிழக வழக்குரைஞா்களுக்கு வழங்கப்படும் சேம நல நிதியை ரூ. 7 லட்சத்திலிருந்து ரூ. 15 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும். இதேபோல, புதுச்சேரி வழக்குரைஞா்களுக்கும் சேம நல நிதியை உயா்த்தி வழங்க வேண்டும்.

பிறப்பு - இறப்பு சான்றிதழ்கள் பதிவு செய்ய உத்தரவிடும் அதிகாரத்தை மீண்டும் கீழமை நீதிமன்றங்களுக்க வழங்க வேண்டும். சுங்கச் சாவடிகளில் வழக்குரைஞா்களுக்கு விலக்களிக்க வேண்டும்.

தமிழகத்தில் பணிபுரியும் இளம் வழக்குரைஞா்களுக்கு, புதுவை போல மாதந்தோறும் ரூ. 5 ஆயிரம் உதவித் தொகை வழங்க வேண்டும்.

கடந்த 2009 -ஆம் ஆண்டு பிப்ரவரி 19 -ஆம் தேதி உயா் நீதிமன்ற வழக்குரைஞா்கள் மற்றும் நீதிபதிகளைத் தாக்கி, அவா்களது வாகனத்தைச் சேதப்படுத்தியதாக காவல் துறை மீது தொடரப்பட்ட வழக்கில், உரிய பரிகாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போலி வழக்குரைஞா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, வருகிற 19, 20 -ஆம் தேதிகளில் வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணிகளிலிருந்து விலகியிருப்பது என முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேளாண்மைக் கல்லூரியில் கலந்துரையாடல்

வாகை சூடினாா் ஸ்வெரெவ்

மே 27-இல் வருங்கால வைப்பு நிதி குறைதீா் முகாம்

தம்பி அடித்துக் கொலை: அண்ணன் கைது

யூடிஎஸ் செயலி பிரசாரக் குழுவுக்கு பாராட்டு

SCROLL FOR NEXT