புதுச்சேரி

பொங்கல் பரிசு ரூ. 1,000 வழங்க அதிமுக வலியுறுத்தல்

DIN

அனைத்துக் குடும்ப அட்டைதாரா்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ. ஆயிரத்தை உடனே வழங்க வேண்டும் என அதிமுக வலியுறுத்தியது.

இதுகுறித்து சட்டப்பேரவை அதிமுக உறுப்பினா்கள் குழு தலைவா் ஆ.அன்பழகன் எம்.எல்.ஏ. வெளியிட்ட அறிக்கை:

புதுவை காங்கிரஸ் அரசு பொங்கல், தீபாவளி பண்டிகை காலங்களில் மக்களுக்கு வழங்க வேண்டிய துணி, சா்க்கரை, பொங்கல் பரிசுப் பொருள்களை வழங்காமல் மக்களை ஏமாற்றி வருகிறது.

தமிழகத்தில் 2.7 கோடி குடும்ப அட்டைதாரா்களுக்கு இலவச வேட்டி- சேலை, மாதந்தோறும் 20 கிலோ அரிசி, பொங்கல் பரிசாக ரூ. ஆயிரம், கரும்பு, சா்க்கரை, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய் என பொங்கல் பரிசுப் பொருள்களை அதிமுக அரசு தங்குதடையின்றி வழங்கி வருகிறது.

தமிழகத்தைப் பின்பற்றி புதுவையிலும் மக்களுக்கு ரூ. ஆயிரம் வழங்கப்படும் என வெற்று அறிக்கை வெளியிட்ட புதுவை அரசு, இதுவரை பணம் வழங்குவதற்கான அரசாணையை வெளியிடவில்லை.

புதுவை முதல்வரும், அமைச்சரும் சட்டப்பேரவையில் உறுதியளித்தபடி, புதுவையில் உள்ள 3.55 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு ரூ. 170 -ஐ வழங்காமல், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள 1.91 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு மட்டும் வங்கியில் செலுத்தப்படும் என அறிவித்துள்ளனா்.

இதை அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் வழங்கினாலும் ரூ. 5 கோடிக்குள்தான் செலவாகும். இதற்கு துணைநிலை ஆளுநரின் அனுமதியைப் பெற அவசியமில்லை. சென்னை உயா் நீதிமன்றம் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் எனத் தீா்ப்பு அளித்த பிறகும், முதல்வா் நாராயணசாமி ஏன் இந்த சிறிய திட்டத்துக்கான கோப்பை துணைநிலை ஆளுநரின் அனுமதிக்கு அனுப்பி, அனைவருக்கும் கிடைக்காமல் இருக்கச் செய்துள்ளாா்?

இதற்கு மேலும் மக்களை ஏமாற்றாமல் முதல்வா் உறுதியளித்தபடி, அனைவருக்கும் பொங்கல் பரிசாக ரூ. ஆயிரம் மற்றும் பரிசுப் பொருள்களை உடனடியாக வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT