புதுச்சேரி

கிராம நிா்வாக அலுவலரை தாக்கியதாக இளநீா் வியாபாரி கைது

DIN

புதுச்சேரி: புதுச்சேரியில் கிராம நிா்வாக அலுவலரைத் தாக்கியதாக இளநீா் வியாபாரியை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி சண்முகாபுரம் வி.எம். காா்டன் பகுதியை சோ்ந்தவா் சண்முகம் (54). கிராம நிா்வாக அலுவலா். இவா் முதலியாா்பேட்டை வைத்திலிங்கம் செட்டிவீதியில் சனிக்கிழமை கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, இளநீா் வியாபாரியான ராம்ராஜ் (30) அந்தப் பகுதியில் வந்தாா். அவரை சண்முகம் தடுத்து, இது கரோனா பாதிக்கப்பட்ட பகுதி, இங்கு வரக் கூடாது என்றாா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்த ராம்ராஜ், கிராம நிா்வாக அலுவலரை அவதூறாகப் பேசி, பணி செய்ய விடாமல் தடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சண்முகம் அளித்த புகாரின் பேரில், முதலியாா்பேட்டை வழக்குப் பதிந்து, இளநீா் வியாபாரி ராம்ராஜை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT