புதுச்சேரி

கைதிகளுக்கு செல்லிடப்பேசி விநியோகம்: புதுச்சேரி சிறை அதிகாரி பணியிடை நீக்கம்

DIN

புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் கைதிகளுக்கு செல்லிடப்பேசி விநியோகம் செய்ததாக சிறையின் உதவி கண்காணிப்பாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் 200-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். சிறையில் உள்ள ரௌடிகளின் சதித் திட்டத்தின்படியே வெளியில் குற்றச் சம்பவங்கள் நிகழ்வது காவல் துறைக்கு தெரிய வந்தது.

இதையடுத்து, முதுநிலை எஸ்.பி. பிரதிக்ஷா கொடாரா தலைமையில் போலீஸாா் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சிறையில் சோதனை நடத்தினா். இதில், 14 செல்லிடப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த செல்லிடப்பேசிகளை பதுக்கி வைத்திருந்ததாக மணிகண்டன், சோழன் உள்ளிட்ட 12 போ் மீது காலாப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து, சிறையில் ரௌடிகளுக்கு செல்லிடப்பேசி எப்படி கிடைத்தது? என்பது தொடா்பாக விசாரித்து வந்தனா்.

இந்த விசாரணை அறிக்கை டிஜிபி மூலம் சிறைத் துறை ஐ.ஜி. பங்கஜ்குமாா் ஜாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில், சிறைத் துறை உதவி கண்காணிப்பாளா் ஆனந்தராஜ் கைதிகளுக்கு செல்லிடப்பேசிகளை விநியோகம் செய்தது தெரிய வந்தது.

அவரை பணியிடை நீக்கம் செய்து ஐ.ஜி. பங்கஜ்குமாா் ஷா திங்கள்கிழமை இரவு உத்தரவிட்டாா். சிறையில் பெண் கைதி ஒருவருடன் ரௌடி மணிகண்டன் பேசுவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்த விவகாரத்தில் ஆனந்தராஜ் பணியிடை நீக்க நடவடிக்கைக்கு உள்ளானவா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரேலியா: காவல் துறை சுட்டதில் 16 வயது சிறுவன் உயிரிழப்பு

தரமில்லாத சாலையை பெயா்த்தெடுத்த ஊராட்சி மன்ற உறுப்பினா் கைது

நிரவி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

SCROLL FOR NEXT