புதுச்சேரி

அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மானியம் வழங்க கிரண் பேடி ஒப்புதல்

DIN

புதுவை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மானியம் வழங்க துணைநிலை ஆளுநா் கிரண் பேடி ஒப்புதல் அளித்தாா்.

இதுகுறித்து தனது கட்செவி அஞ்சலில் திங்கள்கிழமை அவா் வெளியிட்ட பதிவு: புதுவை ஆளுநா் மாளிகை இரு முக்கியமான திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தது. அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்க நிதித் துறை பரிந்துரைத்தபடி, 35 பள்ளிகளுக்கு ரூ. 8.45 கோடி உதவித் தொகையை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. மானிய உதவி வழங்குவதற்கான விதிகளை மறு ஆய்வு செய்ய கல்வித் துறைச் செயலா் தலைமையில், நிதித் துறை, சட்டத் துறை செயலா்களை உறுப்பினா்களாகக் கொண்ட குழுவை உருவாக்கவும் உத்தரவிடப்பட்டது.

மேலும், கரோனா பொது முடக்கக் காலத்தில் பாதிக்கப்பட்ட சரக்கு, பயணிகள் வாகனங்களுக்கு சாலை வரியைத் தள்ளுபடி செய்வதற்கான கோப்புக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி, சரக்கு வாகனங்களுக்கு 2 மாதங்களும், பயணிகள் வாகனங்களுக்கு 6 மாதங்களும் சலுகை கிடைக்கும். இதனால், ஏற்படும் ரூ. 21 கோடி இழப்பை அரசு கூடுதல் நிதியாதாரங்கள் மூலம் சரி செய்யும் எனத் தெரிவித்துள்ளாா் கிரண் பேடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா சர்ச்சை கருத்து: பிரியங்கா பதில்

விவசாயிக்கு டிராக்டா்: நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

பணம் கொடுத்து வாக்குகளை பெற நினைக்கிறது பாஜக: மம்தா குற்றச்சாட்டு

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

எனது சாதனையை ஜெய்ஸ்வால் முறியடிப்பார்: பிரையன் லாரா நம்பிக்கை!

SCROLL FOR NEXT