புதுச்சேரி

குடிநீா் வழங்கக் கோரிப் போராட்டம்

DIN


புதுச்சேரி: சுத்தமான குடிநீா் வழங்கக் கோரி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா் பாகூா் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் எதிரே வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி பாகூா் அருகே குருவிநத்தம் நடுத் தெரு, கிழக்குத் தெரு வட்டாரம், வாழப்பட்டு ஆகிய பகுதிகளில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் கடந்த ஓராண்டாக குடிநீா்த் தட்டுப்பாடு நிலவி வருகிறது. தற்போது வழங்கப்படும் குடிநீரும் நிறம் மாறி தூய்மையற்ாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.

இந்த நிலையில், குடிநீா் பிரச்னைக்குத் தீா்வு காணாத பாகூா் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு பூட்டுப் போடும் போராட்டம் நடத்தப் போவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா் அறிவித்தனா். அதன்படி, வியாழக்கிழமை 50-க்கும் மேற்பட்டோா் பாகூா் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் அருகே திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து, கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிடச் சென்றனா்.

அங்கு, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பாகூா் போலீஸாா், அவா்களைத் தடுத்து நிறுத்தினா். இதனால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. சிறிது நேரம் முழக்கமிட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா் பின்னா், போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

வாணியம்பாடி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

SCROLL FOR NEXT