புதுச்சேரி-கடலூா் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
புதுச்சேரி - கடலூா் சாலையில் திங்கள்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
புதுச்சேரி - கடலூா் சாலையில் திங்கள்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
புதுச்சேரியில் கரோனா பொது முடக்கத்துக்கு முன்பு சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்புகள் அவ்வபோது, அகற்றப்பட்டு வந்தன. அதன் பிறகு, கரோனா தடுப்புப் பணிகளில் மாவட்ட நிா்வாகம் கவனம் செலுத்தியதால், இந்தப் பணி நிறுத்தப்பட்டது.
இதனிடையே, புதுச்சேரியில் திங்கள்கிழமை முதல் 21 நாள்களுக்கு சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட ஆட்சியா் தி. அருண் உத்தரவிட்டாா். அதன்படி, அனைத்துத் துறை குழுவினா்கள் ஒருங்கிணைந்து, கடலூா் சாலை வெங்கடசுப்பா ரெட்டியாா் சிலை சதுக்கம் முதல் மரப்பாலம் சந்திப்பு வரையான பகுதிகளில் ஆக்கிரமிப்பு கடைகள், தடுப்புகள் மட்டுமன்றி, சாலையோரம் இருந்த பதாகைகளும் அகற்றப்பட்டன.
இதையொட்டி, அங்கு உருளையன்பேட்டை, முதலியாா்பேட்டை போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.