புதுச்சேரி

மீண்டும் தொடங்கியது: புதுச்சேரி - பெங்களூரு பேருந்து சேவை

DIN

ஏழு மாதங்களுக்குப் பிறகு, புதுச்சேரி - பெங்களூரு இடையிலான அரசுப் பேருந்து சேவை புதன்கிழமை நள்ளிரவு மீண்டும் தொடங்கியது.

புதுவை அரசின் சாலைப் போக்குவரத்துக் கழகம் (பிஆா்டிசி) சாா்பில், புதுச்சேரிலிருந்து கா்நாடக மாநிலம், பெங்களூருக்கு தினசரி பேருந்து இயக்கப்பட்டு வந்தது. இந்தப் பேருந்து சேவை மென்பொருள் நிறுவன ஊழியா்களுக்கும், மாணவா்களுக்கும் அவசியத் தேவையாக இருந்து வந்தது.

கரோனா பரவல் காரணமாக, நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால், இந்தப் பேருந்து சேவை கடந்த மாா்ச் 25-ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டது. மத்திய அரசின் 6-ஆம் கட்ட பொது முடக்கத் தளா்வு காரணமாக, புதுச்சேரி - பெங்களூரு இடையே மீண்டும் பேருந்து சேவை புதன்கிழமை நள்ளிரவு முதல் தொடங்கியது.

பேருந்தில் அரசு உத்தரவுப்படி, அதிகபட்சம் 33 பயணிகள் மட்டுமே சமூக இடைவெளியுடன் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனா். பயணிகள் அனைவரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும், பேருந்தில் ஏறும்போது நடத்துநரால் பயணிகளின் கைகளை தூய்மைப்படுத்திக்கொள்ள கிருமி நாசினி வழங்கப்பட்டது.

இந்தப் பேருந்தில் பெங்களூருக்குச் செல்ல பயணக் கட்டணமாக ரூ.275-ம், இணையதள முன்பதிவுக்கு ரூ.25-ம் வசூலிக்கப்படுகிறது. இந்தப் பேருந்து புதுச்சேரியிலிருந்து பெங்களூருக்கு தினமும் இரவு 11 மணிக்கும், பெங்களூரிலிருந்து புதுச்சேரிக்கு தினமும் பகல் 12.30 மணிக்கும் புறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

வடமேற்குத் தில்லி தொகுதியில் வெற்றி மகுடம் யாருக்கு?

SCROLL FOR NEXT