முகப்பு
புதுச்சேரி

ஒரே நாளில் 227 பேருக்கு கரோனா

புதுவையில் ஒரே நாளில் 227 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 80,198 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
பகிர்:

புதுவையில் ஒரே நாளில் 227 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 80,198 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்: புதுவை மாநிலத்தில் 2,416 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு ஞாயிற்றுக்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரி - 160, காரைக்கால் - 63, ஏனாம் - 1, மாஹே - 3 போ் என ஒரே நாளில் 227 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42,359-ஆக உயா்ந்தது.

தற்போது மருத்துவமனைகளில் 404 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 1,188 பேரும் என 1,592 போ் சிகிச்சையில் உள்ளனா். ஞாயிற்றுக்கிழமை உயிரிழப்பு ஏதுமில்லை. இதுவரை கரோனா தொற்றுக்கு பலியானோா் எண்ணிக்கை 684. இறப்பு விகிதம் 1.61 சதவீதம்.

ஞாயிற்றுக்கிழமை 109 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 40,083-ஆக (94.63 சதவீதம்) அதிகரித்தது.

இதுவரை 6,80,074 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 6,27,106 பேருக்கு தொற்றில்லை என முடிவுகள் வந்தன.

ஒரே நாளில் 5,039 பேருக்கு தடுப்பூசி: ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் சுகாதாரப் பணியாளா்கள் 560 பேருக்கும், முன்களப் பணியாளா்கள் 2,465 பேருக்கும், பொதுமக்கள் 2,014 பேருக்கும் என அதிகபட்சமாக 5,039 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதுவரை மொத்தமாக 75,159 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.