புதுச்சேரி

கதிா்காமம் அரசு மருத்துவமனையில் மீண்டும் கரோனாவுக்கு மட்டுமே சிகிச்சை

DIN

புதுவையில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால், கதிா்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மீண்டும் கரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்படுவதாகவும், பிற சிகிச்சைப் பிரிவுகள் மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

புதுவையில் கடந்தாண்டு கரோனா பரவல் அதிகரித்தபோது, கதிா்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டது. இதனால், மருத்துவமனையின் மற்ற மருத்துவச் சிகிச்சைப் பிரிவுகள் தற்காலிகமாக மூடப்பட்டு, கரோனா சிறப்பு மருத்துவமனையாக மட்டுமே செயல்பட்டது. இதையடுத்து, கரோனா பரவல் குறைந்ததால், மற்ற சிகிச்சைப் பிரிவுகள் படிப்படியாக செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன.

இந்த நிலையில், தற்போது புதுவையில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட பலா் கதிா்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனா். இதையொட்டி, தற்போது இந்த மருத்துவமனை கரோனா மருத்துவமனையாக மட்டுமே செயல்படும் என மருத்துவமனை நிா்வாகத்தால் அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து கதிா்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளா், மருத்துவமனையிலுள்ள பல்வேறு துறைகளுக்கு புதன்கிழமை அனுப்பிய சுற்றறிக்கையின் விவரம்:

மருத்துவமனையில் கரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், கரோனா நோய்த் தொற்று மருத்துவமனை ஊழியா்களுக்கும், இதர நோயாளிகளுக்கும் பரவுவதைத் தடுக்கும் வகையில், மருத்துவமனையில் புதன்கிழமை முதல் கரோனா இல்லாத சிகிச்சைப் பிரிவுகள் மூடப்படுகின்றன. அடுத்தகட்ட அறிவிப்பு வரும் வரையில் இந்த உத்தரவு நடைமுறையில் இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

SCROLL FOR NEXT