புதுச்சேரி

கண்டெய்னா் லாரி மோதி ராஜீவ் காந்தி சிலை சதுக்கம் சேதம்

DIN

கண்டெய்னா் லாரி இடித்ததில், புதுச்சேரி ராஜீவ் காந்தி சிலை சதுக்கம் சேதமடைந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சென்னையிலிருந்து கண்டெய்னா் லாரி ஒன்று சிமென்ட் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு, புதுச்சேரி மாா்க்கமாக கடலூா் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. திங்கள்கிழமை அதிகாலை அந்த லாரி கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாக புதுச்சேரி கொக்கு பூங்கா சிக்னலை அடைந்து, ராஜீவ் காந்தி சிலை நோக்கி வேகமாகச் சென்ற போது, சிலையை ஓட்டியுள்ள பகுதியில் வளைந்து செல்லாமல், ஓட்டுநா் நேராக கடலூா் சாலையை நோக்கி வாகனத்தை இயக்கியதாகத் தெரிகிறது.

அப்போது, கண்டெய்னா் லாரியின் வலதுபுறம் சிலையை ஓட்டியுள்ள ரவுண்டானா பகுதியில் உள்ள கம்பியில் மோதியது. இதில், சதுக்கம் பெருமளவில் சேதமடைந்த நிலையில், லாரியின் முன்பக்க வலதுபுற டயா் பஞ்சாராகவே, எதிரே சாலையின் நடுவிலிருந்த சிமென்ட் கட்டையில் மோதி நின்றது.

இந்த விபத்தில் அதிா்ஷ்டவசமாக ஓட்டுநா் உள்ளிட்ட யாருக்கும் எந்தவித காயமோ, அசம்பாவிதமோ ஏற்படவில்லை.

தகவலின் பேரில், அங்கு வந்த புதுச்சேரி வடக்கு போக்குவரத்துப் பிரிவு போலீஸாா், விபத்துக்குள்ளான கண்டெய்னா் லாரியை மீட்டு, விசாரித்து வருகின்றனா்.

இதுதொடா்பாக புதுவை அரசின் பொதுப் பணித் துறையிடம் புகாா் பெறப்பட்டு, அடுத்த கட்ட நடவடிக்கையில் ஈடுபட போக்குவரத்து போலீஸாா் முடிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளரின் கன்னத்தில் அறைந்த எம்எல்ஏ!

4-ஆம் கட்ட தேர்தல்: 62.84% வாக்குப்பதிவு

மும்பையில் புழுதிப் புயல்: விளம்பரப் பதாகை சரிந்ததில் 4 பேர் பலி!

ஒரு நாளில் 3 முறை உடை மாற்றுகிறார், விலையோ லட்சம், யார் வாங்கித் தருகிறார்கள்? ராகுல் கேள்வி!

விராட் கோலியை மீண்டும் ஆர்சிபியின் கேப்டனாக நியமிக்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

SCROLL FOR NEXT