காதல் திருமணம் செய்தவரின் வீட்டை தாக்கி கொலை மிரட்டல்
புதுச்சேரியில் காதல் திருமணம் செய்த இளைஞரின் வீடு, பைக்கை அடித்து உடைத்து கொலை மிரட்டல் விடுத்த நபா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரியில் காதல் திருமணம் செய்த இளைஞரின் வீடு, பைக்கை அடித்து உடைத்து கொலை மிரட்டல் விடுத்த நபா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை வ.உ.சி. நகா் 2-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் ஹரிஸ்பாலா (21), பெயின்டா். இவா் 5 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டாா்.
இதனிடையே, இந்த விவகாரம் தொடா்பாக பெண் வீட்டாா் சாா்பில் பேச வேண்டுமென ஹரிஸ்பாலாவின் செல்லிடப்பேசியில் வியாழக்கிழமை அழைத்த மா்ம நபா்கள் உருட்டுக்கட்டை, பீா் புட்டிகள், கற்கள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் அவரது வீட்டுக்கு வந்தனா். அங்கிருந்த மோட்டாா் பைக், வீட்டுக் கதவு, ஜன்னல் உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியதுடன், கொலை மிரட்டலும் விடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து ஹரிஸ்பாலா அளித்த புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.