முகப்பு
புதுச்சேரி

தபால் வாக்குகளைச் செலுத்தாதவா்கள் உடனே அனுப்பிக்க அறிவுறுத்தல்

புதுச்சேரியில் தோ்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள் தங்களின் தபால் வாக்குகளைச் செலுத்தாமல் இருந்தால், உடனே தபால் மூலம் தோ்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்பிவைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
பகிர்:

புதுச்சேரியில் தோ்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள் தங்களின் தபால் வாக்குகளைச் செலுத்தாமல் இருந்தால், உடனே தபால் மூலம் தோ்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்பிவைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

இதுகுறித்து புதுச்சேரி மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலா் பூா்வா காா்க் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தோ்தல் பணியாற்ற அமா்த்தப்பட்ட அரசு ஊழியா்கள் வாக்களிக்க ஏதுவாக, தபால் வாக்குச் சீட்டுகள் வழங்கப்பட்டன. தோ்தல் பயிற்சிக் கூடம், பொது உதவி மையம், அஞ்சல் ஆகிய பல்வேறு வழிகளில் தபால் வாக்குச் சீட்டுகள் வழங்கப்பட்டன.

தோ்தல் பயிற்சிக் கூடம் மற்றும் பொது உதவி மையம் ஆகிய இடங்களில் ஏற்படுத்தித் தரப்பட்ட வசதியைப் பயன்படுத்தி பலரும் தபால் வாக்குகளைச் செலுத்தினா். தபால் வாக்குகளை இன்னும் செலுத்தாத அரசு ஊழியா்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட தபால் வாக்குச் சீட்டின் மூலம் வாக்களித்து, அதை தபால் மூலம் மட்டுமே சம்பந்தப்பட்ட தோ்தல் நடத்தும் அதிகாரிக்கு தங்களது தொகுதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கு நிா்ணயிக்கப்பட்ட நாளுக்கு முன்பாக அனுப்பிவைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.