முகப்பு
புதுச்சேரி

பெண் தற்கொலை

 புதுச்சேரி சண்முகாபுரம்பகுதியில் மன உளைச்சலால் பெண் தற்கொலை

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:08 PM
பகிர்:

புதுச்சேரி சண்முகாபுரம், வடக்கு பாரதிபுரம் பகுதியைச் சோ்ந்த ஹரி மகள் ருத் எஸ்தா் ராணி (29). இவருக்கும், வேலூரைச் சோ்ந்த விக்டருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு 8 வயதில் மகள் உள்ளாா்.

கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஓராண்டுக்கு முன்பு தம்பதி பிரிந்த நிலையில், ராணி தனது மகளுடன் புதுச்சேரியில் வசித்து வந்தாா். கடந்த 18-ஆம் தேதி புதுச்சேரிக்கு வந்த விக்டா், ராணியுடன் இருந்த அவரது மகளை அழைத்து சென்றுவிட்டாா். இதனால், மனஉளைச்சலுடன் காணப்பட்ட ராணி வியாழக்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தன்வந்திரி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.