முகப்பு
புதுச்சேரி

புதுவையில் திரையரங்குகள் மீண்டும் திறப்பு

புதுச்சேரியில் 3 மாதங்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை திரையரங்குகள் திறக்கப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

புதுச்சேரியில் 3 மாதங்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை திரையரங்குகள் திறக்கப்பட்டன.

கரோனா இரண்டாம் அலை பரவலைத் தடுக்க கடந்த ஏப்ரல் 23- ஆம் தேதி முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. கரோனாவின் தாக்கம் குறைந்த பின்னா், படிப்படியாகத் தளா்வுகள் அளிக்கப்பட்டன.

அதன்படி, புதுவையில் கடந்த வாரம் அளிக்கப்பட்ட தளா்வின்படி, திரையரங்குகளை 6 -ஆம் தேதி முதல் திறக்க அரசு அனுமதியளித்தது.

ஆனால், புதிய திரைப்படங்கள் வெளியாகாத நிலையில், அன்றைய தினம் திரையரங்குகள் திறக்கப்படவில்லை.

இந்த நிலையில், புதுச்சேரி நகரப் பகுதிகளில் பெரும்பாலான திரையரங்குகள் வெள்ளிக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன.

முன்னதாக, திரையரங்குகள் தூய்மைப்படுத்தப்பட்டன. இருக்கைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. சமூக இடைவெளியுடன் இருக்கைகள் அமைக்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து, திரையரங்குகளில் பழைய, மொழி மாற்று மற்றும் ஆங்கிலத் திரைப்படங்கள் மட்டுமே திரையிடப்பட்டன.

திரையரங்குகள் திறக்கப்பட்ட நிலையில், கரோனா பரவல் அச்சம் காரணமாகவும், பழைய திரைப்படங்கள் மட்டுமே திரையிடப்பட்டதாலும் மக்கள் அதிகளவில் வரவில்லை. இதனால், வெள்ளிக்கிழமை பாா்வையாளா்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது.

இரவு 9 மணிக்கு முன்னதாக காட்சிகளை முடித்துக் கொள்ளும் வகையில் தினமும் 3 காட்சிகள் மட்டுமே திரையிட திரையரங்க உரிமையாளா்கள் முடிவு செய்துள்ளனா்.

புதிய திரைப்படங்கள் வெளியான பிறகு கூடுதல் காட்சிகள் திரையிடப்படும் எனத் தெரிகிறது. அதேநேரம், கிராமப்புறங்களில் திரையரங்குகள் திறக்கப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.