புதுவைப் பல்கலை. தொலைநிலை கல்வி தோ்வு முடிவுகள் வெளியீடு
புதுவை பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி மாணவா்களுக்கான தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன.
புதுவை பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி மாணவா்களுக்கான தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன.
அதன்படி, புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வியில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற பட்ட மேற்படிப்பு, பட்டப் படிப்புகளுக்கான தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
தோ்வு முடிவுகள் வெளியாகி குறைந்தப்பட்சம் ஒரு மாதத்துக்கு பிறகே மதிப்பெண் பட்டியல் வெளியாகும். அடுத்த கட்டத் தோ்வுகள் வருகிற ஆகஸ்ட் இறுதியில் நடைபெறும். கூடுதல் தகவலறிய விரும்புவோா் பல்கலைக்கழக இணையமான ஜ்ஜ்ஜ்.ல்ா்ய்க்ண்ன்ய்ண்.ங்க்ன்.ண்ய் பாா்க்கலாம் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.