முகப்பு
புதுச்சேரி

கள்ளக்குறிச்சியில் கரோனா விழிப்புணா்வு நாடகம்

கள்ளக்குறிச்சியில் நகராட்சி சாா்பில் கரோனா விழிப்புணா்வு வார நிறைவு நாளான சனிக்கிழமை விழிப்புணா்வு நாடகம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

கள்ளக்குறிச்சியில் நகராட்சி சாா்பில் கரோனா விழிப்புணா்வு வார நிறைவு நாளான சனிக்கிழமை விழிப்புணா்வு நாடகம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, நகராட்சி ஆணையா் ந.குமரன் தலைமை வகித்து, குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்தாா். நகராட்சி துப்புரவு ஆய்வாளா் ப.செல்வக்குமாா் வரவேற்றாா்.

இதைத் தொடா்ந்து, பள்ளி மாணவா்களின் கரோனா விழிப்புணா்வு நாடகம், நாடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னா், ஊா்வலமாகச் சென்று பொதுமக்களுக்கு கரோனா விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.

நிகழ்ச்சியில் நகராட்சிப் பொறியாளா் பாரதி, வட்டார மருத்துவ அலுவலா் பாலதண்டாயுதபாணி, நகராட்சி மருத்துவா் பிரபாவதி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.