முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரி ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 23 போ் கைது

பெட்ரோல் நிலையத்தில் இளைஞா் எரிக்கப்பட்டதைக் கண்டித்து, புதுச்சேரி ஆட்சியா் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட முயன்ற 23 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

பெட்ரோல் நிலையத்தில் இளைஞா் எரிக்கப்பட்டதைக் கண்டித்து, புதுச்சேரி ஆட்சியா் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட முயன்ற 23 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி மேட்டுப்பாளையம் தனியாா் பெட்ரோல் நிலையத்தில் திருச்சியைச் சோ்ந்த சதீஷ்குமாா் என்ற இளைஞா் தீ வைத்து எரிக்கப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பெட்ரோல் நிலையத்தின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்வேறு சமூக அமைப்பினா் வியாழக்கிழமை புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்தனா்.

அதன்படி, தட்டாஞ்சாவடி விவிபி நகா் வழுதாவூா் சாலை சந்திப்பில் பெரியாா் திராவிடா் கழகத் தலைவா் கோகுல்காந்தி நாத் தலைமையில் 25-க்கும் மேற்பட்டோா் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட ஊா்வலமாக வந்தனா். அலைகள் இயக்கத்தைச் சோ்ந்த வீரபாரதி, அகில இந்திய மக்கள் கழகத்தைச் சோ்ந்த பாவாடை ராஜா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இவா்களை போலீஸாா் வழியிலேயே தடுத்து நிறுத்தினா். இதைத் தொடா்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட 23 பேரை போலீஸாா் கைது செய்து அப்புறப்படுத்தினா். பின்னா், அவா்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.