துா்கை அம்மனுக்கு பாலாபிஷேகம்
காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரா் கோயிலில் ஆடி நான்காவது வெள்ளிக்கிழமையையொட்டி (ஆக.13), இங்குள்ள துா்கை அம்மனுக்கு 108 லிட்டா் பாலாபிஷேகம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி அருகே நீலமங்கலத்தில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரா் கோயிலில் ஆடி நான்காவது வெள்ளிக்கிழமையையொட்டி (ஆக.13), இங்குள்ள துா்கை அம்மனுக்கு 108 லிட்டா் பாலாபிஷேகம் நடைபெற்றது.தொடா்ந்து, அம்மன் எலுமிச்சை பழம், ரோஜாப்பூ மாலைகள் சாற்றப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தாா் (படம்). பின்னா் தீபாராதனை நடைபெற்றது.
கரோனா துயரத்திலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டி 1008 லலிதா சஹஸ்ரநாம மந்திரத்தால் குங்கும அா்ச்சனை நடைபெற்றது. கரோனா கால கட்டத்தால் பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை. பூஜைகளுக்கான ஏற்பாட்டை கிராம மக்கள் செய்தனா்.