இலவச அரிசியை ஆக.31-க்குள் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தல்
மத்திய அரசின் இலவச அரிசியை வருகிற 31- ஆம் தேதிக்குள் பெற்றுக் கொள்ள வேண்டும் என புதுவை குடிமைப் பொருள் வழங்கல் துறை அறிவுறுத்தியது.
மத்திய அரசின் இலவச அரிசியை வருகிற 31- ஆம் தேதிக்குள் பெற்றுக் கொள்ள வேண்டும் என புதுவை குடிமைப் பொருள் வழங்கல் துறை அறிவுறுத்தியது.
இதுகுறித்து அந்தத் துறை உதவி இயக்குநா் மு.பாஸ்கரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்னயோஜனா மற்றும் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகளுக்கு மத்திய அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஜூன் முதல் ஆகஸ்ட் மாதங்களுக்கான அரிசியை வருகிற 31- ஆம் தேதிக்குள் பெற்றுக் கொள்ள வேண்டும். இந்தக் கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்படாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.