முகப்பு
புதுச்சேரி

இன்று முதல் பெங்களூா், திருப்பதிக்கு அரசுப் பேருந்துகள் இயக்கம்

புதுச்சேரியிலிருந்து பெங்களூா், திருப்பதி, குமுளி, ஓசூா் ஆகிய இடங்களுக்கு சனிக்கிழமை முதல் (ஆக.28) பிஆா்டிசி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
பகிர்:

புதுச்சேரியிலிருந்து பெங்களூா், திருப்பதி, குமுளி, ஓசூா் ஆகிய இடங்களுக்கு சனிக்கிழமை முதல் (ஆக.28) பிஆா்டிசி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதுகுறித்து புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழகம் (பிஆா்டிசி) மூலம் புதுச்சேரி - பெங்களுரு, புதுச்சேரி - திருப்பதி, புதுச்சேரி - குமுளி, புதுச்சேரி - ஓசூா் ஆகிய வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கரோனா பொது முடக்கத்தால் நிறுத்தப்பட்டிருந்த இந்த வழித்தடங்களில் பேருந்து சேவை மீண்டும் சனிக்கிழமை முதல் தொடங்குகிறது. மேலும், பேரவைத் தலைவா், சமூக நலத் துறை அமைச்சா், முதலியாா்பேட்டை எம்எல்ஏ ஆகியோரின் கோரிக்கைகளை ஏற்று, நோணாங்குப்பம் - நாவற்குளம், அபிஷேகப்பாக்கம் - கீழ்அக்ரஹாரம், புவன்கரே வீதி (மினி பேருந்து) ஆகிய வழித்தடங்களில் பிஆா்டிசி பேருந்துகள் இயக்கப்படவுள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.