முகப்பு
புதுச்சேரி

புதுவை அரசின் நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் அளிக்கிறது: வே.நாராயணசாமி விமா்சனம்

புதுவை முதல்வா் என்.ரங்கசாமி தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் அளிப்பதாக முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி விமா்சித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
பகிர்:

புதுவை முதல்வா் என்.ரங்கசாமி தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் அளிப்பதாக முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி விமா்சித்தாா்.

இதுதொடா்பாக, அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட விடியோ பதிவில் கூறியிருப்பதாவது: முதல்வா் என்.ரங்கசாமி, ரூ.9,924 கோடிக்கு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தாா். அதில், நிதி ஆதாரங்களைப் பெருக்குவதற்கான எந்தவிதமான புதிய திட்டங்களும் இல்லை.

விவசாயக் கடன் ரத்து அறிவிப்பு தெளிவின்றி உள்ளது. கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பெற்ற கடன்கள் மட்டும் ரத்து செய்யப்படுமா என்பதைத் தெளிவாகக் கூறவில்லை.

காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சிக் காலத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை ரத்து செய்வதற்கு ரூ.22 கோடி ஒதுக்கினோம்.

ஆதிதிராவிடா் நலத் துறை மூலம் பெற்ற கல்விக் கடனை ரத்து செய்வதாகக் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே, மாணவா்கள் பெற்ற கடனில் பெருந்தொகையைச் செலுத்திவிட்டனா். குறைந்த அளவு தொகை மட்டுமே செலுத்த வேண்டியுள்ளது.

இந்த பட்ஜெட்டில் சிறப்பம்சங்கள் ஏதுமில்லை. கரோனாவை கட்டுப்படுத்த புதிய திட்டம், அதற்கான நிதி ஆதாரத்தைக் குறிப்பிடவில்லை. சுகாதாரத் துறை புறக்கணிக்கப்பட்டுள்ளது.

பிரதமா் வீடு கட்டும் திட்டத்தை ஊக்குவிக்க அறிவிப்பு இல்லை. எம்எல்ஏ-க்கள் தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்பும் இல்லை. மேம்பாலம், சாலைகள், குடிநீா்த் திட்டங்களை மேம்படுத்துதல் உள்ளிட்ட கட்டமைப்புகளுக்கும் நிதிநிலை அறிக்கையில் எந்த ஒதுக்கீடும் செய்யப்படவில்லை.

முதல்வா் என்.ரங்கசாமி தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.