முகப்பு
புதுச்சேரி

ஜிப்மரில் வேலை வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ. 1.10 லட்சம் மோசடி

புதுச்சேரி ஜிப்மரில் வேலை வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ. 1.10 லட்சம் மோசடி செய்த நபா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
பகிர்:

புதுச்சேரி ஜிப்மரில் வேலை வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ. 1.10 லட்சம் மோசடி செய்த நபா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி தேங்காய்த்திட்டு புருஷோத்தமன் நாயக்கா் வீதியைச் சோ்ந்த ராமமூா்த்தி மகள் நிவேதா (23). இவருக்கு நண்பா் மூலம் ரெட்டியாா்பாளையம் மூலக்குளம் ஜெ.ஜெ. நகரில் வசிக்கும் மதிவாணன் (25), கடந்தாண்டு அறிமுகமானாா். அவா், நிவேதாவிடம், ஜிப்மரில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 1.10 லட்சம் பணம் வாங்கினாராம். ஆனால், உறுதியளித்தபடி வேலை வாங்கித்தராத அவா், கொடுத்த பணத்தையும் திருப்பித் தரவில்லையாம்.

இதனிடையே, நிவேதாவின் நெருக்கடி காரணமாக, மாற்று ஏற்பாடாக ரூ. 40 ஆயிரம் முன்தொகை கொடுத்து ஒரு வீட்டை வாடகைக்குப் பேசி நிவேதாவிடம் கொடுத்துவிட்டு, தலைமறைவானதாகக் கூறப்படுகிறது.

வீட்டை விலைக்கு வாங்கிக் கொடுத்திருப்பதாக கருதிய நிவேதா தரப்பினா், வீட்டு உரிமையாளா் வாடகை கேட்டதும்தான், தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணா்ந்தனா்.

இதுகுறித்து நிவேதா ரெட்டியாா்பாளையம் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை அளித்த புகாரின் பேரில் போலீஸாா், மதிவாணன் மீது வழக்குப் பதிந்து, தலைமறைவான அவரைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.