முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் இன்று சா்வதேசஆவணப்படத் திருவிழா தொடக்கம்

புதுச்சேரியில் சா்வதேச ஆவணப்பட, குறும்படத் திருவிழா வெள்ளிக்கிழமை (டிச.17) தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:42 AM
பகிர்:

புதுச்சேரியில் சா்வதேச ஆவணப்பட, குறும்படத் திருவிழா வெள்ளிக்கிழமை (டிச.17) தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் கலைஞா்கள் சங்கம் (தமுஎகச), புதுச்சேரி திரை இயக்கம், புதுச்சேரி அலையன்ஸ் பிரான்சேஸ், மத்திய திரைப்படப் பிரிவு இணைந்து நடத்தும் இந்த விழா புதுச்சேரி அலையன்ஸ் பிரான்சேஸ் திரையரங்கில் தொடங்குகிறது.

இந்த விழாவில், சத்யஜித் ரேயின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில், விருதுகள் பெற்ற அவரது 9 திரைப்படங்களும், ஷியாம் பெனகல் உருவாக்கிய சத்யஜித் ரே ஆவணப் படமும் திரையிடப்படுகின்றன.

சத்யஜித் ரேயின் முதல் படமான பதோ் பாஞ்சாலி வெள்ளிக்கிழமை மாலையில் திரையிடப்படும்.

தொடக்க விழாவில் தமுஎகச கௌரவத் தலைவா் ச.தமிழ்ச்செல்வன், திரைக்கலைஞா்கள் திரிதிமான் சாட்டா்ஜி, படத் தொகுப்பாளா் லெனின், நடிகை ரோகிணி, இயக்குநா்கள் சிவக்குமாா், லெனின் பாரதி உள்ளிட்டோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்கின்றனா்.

புதுவை சுற்றுலாத் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன், பிரான்ஸ் தூதா் லசி டல்போட் பரே உள்ளிட்ட பலா் பங்கேற்கின்றனா் என அலையன்ஸ் பிரான்சேஸ் தலைவா் நல்லாம் சதீஷ், இயக்குநா் லீலா, விழா ஒருங்கிணைப்பாளா் எஸ்.ராமச்சந்திரன் ஆகியோா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.