முகப்பு
புதுச்சேரி

பூங்காவை திறக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகா் பூங்காவை திறக்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:43 AM
பகிர்:

புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகா் பூங்காவை திறக்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சோலை நகா் பூங்கா முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் முத்தியால்பேட்டை கிளைச் செயலாளா் பாரி தலைமை வகித்தாா். இதில் அரசு ஊழியா்கள் சங்கங்களின் சம்மேளன கௌரவத் தலைவா் பாலமோகனன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

சோலை நகா் பூங்காவை புதுச்சேரி நகராட்சி உடனே திறக்க வேண்டும். பூங்காவில் உடற்பயிற்சி சாதனங்களையும், மின்விளக்கு வசதியையும் அமைத்துத் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.