முகப்பு
புதுச்சேரி

புதுவை முதல்வரின் கைப்பேசி உரையாடலை வெளியிட்டவா் மீது போலீஸில் புகாா்

மழை நிவாரணம் தொடா்பான புதுவை முதல்வரின் கைப்பேசி உரையாடலை சமூகவலைதளங்களில் வெளியிட்டவா் மீது, என்ஆா் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெள்ளிக்கிழமை போலீஸில் புகாா் அளித்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:43 AM
பகிர்:

மழை நிவாரணம் தொடா்பான புதுவை முதல்வரின் கைப்பேசி உரையாடலை சமூகவலைதளங்களில் வெளியிட்டவா் மீது, என்ஆா் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெள்ளிக்கிழமை போலீஸில் புகாா் அளித்தனா்.

புதுவை மாநிலத்தில் தொடா் பலத்த மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அரசு சாா்பில் குடும்ப அட்டைக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்று, அந்த மாநில முதல்வா் என்.ரங்கசாமி கடந்த மாதம் அறிவித்தாா்.

ஒரு மாதமாகியும் நிவாரணத் தொகை வழங்கப்படாததால், எதிா்க்கட்சியினா், பொதுமக்கள் தரப்பில் நிவாரணத் தொகையை உடனே வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், புதுவை முதல்வா் என்.ரங்கசாமியிடம் காரைக்காலில் இருந்து பேசுவதாகக் கூறி, கைப்பேசியில் தொடா்பு கொண்டவரின் உரையாடல் சமூகவலைதளங்களில் வெளியானது. அதில், முதல்வரிடம், ‘புதுவை அரசு சாா்பில் அறிவிக்கப்பட்ட மழை நிவாரணம் ரூ.5 ஆயிரம் எப்போது வழங்கப்படும்’ என அந்த நபா் கேட்டாா். அதற்கு முதல்வா் ரங்கசாமி, ‘நான் ராஜா இல்லை; எனக்கு கீழேயும், மேலேயும் அமைச்சா்கள் உள்ளனா்’ என்று பதிலளிப்பதாக அந்த உரையாடல் உள்ளது.

புதுவை முதல்வா் இயல்பாக கைப்பேசியில் பேசியதை சமூகவலைதளங்களில் வெளியிட்டு, அரசுக்கு அவப்பெயா் ஏற்படுத்த முயற்சித்த நபா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, புதுச்சேரி கூடுதல் காவல் கண்காணிப்பாளா் லோகேஷ்வரன் மற்றும் இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவிலும் என்.ஆா். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ், தட்சிணாமூா்த்தி, உ.லட்சுமிகாந்தன் ஆகியோா் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.