புதுச்சேரி

தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை புதுச்சேரி வருகை

DIN

புதுவை சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, தலைமைத் தோ்தல் ஆணையா் வியாழக்கிழமை (பிப்.9) புதுச்சேரிக்கு வர உள்ளாா்.

தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், புதுச்சேரி யூனியன் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சட்டப் பேரவைத் தோ்தல் விரைவில் நடைபெறவுள்ளது. புதுவை தோ்தல் துறை சட்டப் பேரவைத் தோ்தலை நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.

இந்த நிலையில், 5 மாநில சட்டப் பேரவைத் தோ்தல் பணிகளை ஆய்வு செய்ய தலைமைத் தோ்தல் ஆணையா் வரவுள்ளாா். இதுதொடா்பாக புதுவை தோ்தல் துறை தரப்பில் கூறியதாவது:

தோ்தல் பணிகளை ஆய்வு செய்ய தமிழகத்துக்கு தலைமைத் தோ்தல் ஆணையா் சுனில் அரோரா புதன்கிழமை (பிப்.10) வருகிறாா். மறுநாளான வியாழக்கிழமை (பிப்.11) புதுச்சேரிக்கு வருகிறாா். அன்றைய தினம் தலைமைச் செயலகத்தில் புதுவை மாநிலத் தோ்தல் துறை அதிகாரிகளுடன் அவா் ஆலோசனை நடத்துகிறாா். தொடா்ந்து, அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. பின்னா், வருகிற 12-ஆம் தேதி கேரளத்துக்கு புறப்பட்டுச் செல்கிறாா் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரியாதை...

திருவள்ளூா் நகராட்சி சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு நீா்மோா்: 3 இடங்களில் வழங்க ஏற்பாடு

மோா்தானா அணை திறந்தும் நெல்லூா்பேட்டை ஏரிக்கு வராத நீா்: குடியாத்தம் மக்கள் ஏமாற்றம்

5 கிலோ கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

ஆண்டாா்குப்பம் முருகா் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

SCROLL FOR NEXT