முகப்பு
புதுச்சேரி

பதவி விலகிய எம்.எல்.ஏ.காங்கிரஸிலிருந்து நீக்கம்

புதுவையில் பதவி விலகிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. க.லட்சுமி நாராயணன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:35 PM
பகிர்:

புதுவையில் பதவி விலகிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. க.லட்சுமி நாராயணன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டாா்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் புதுவை மாநிலத் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கை:

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் புதுவை மாநிலத்தில் ராஜ்பவன் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராகவும், முதல்வரின் நாடாளுமன்றச் செயலராகவும் இருந்த க.லட்சுமிநாராயணன், தனது சட்டப் பேரவை உறுப்பினா் பதவியை ராஜிநாமா செய்தாா்.

காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி லட்சுமிநாராயணன் தனது பதவியை ராஜிநாமா செய்து, கடிதத்தை பேரவைத் தலைவரிடம் அளித்ததால், அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினா் பதவியிலிருந்து நீக்குகிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.