மிதிவண்டி மூலம் கரோனா விழிப்புணா்வு
புதுவை கல்வித் துறை நுண்கலை ஆசிரியா் பா.பச்சையப்பன், மிதிவண்டியில் ஒலிப்பெருக்கியைக் கட்டிக் கொண்டு, துண்டு பிரசுரங்கள் வழங்கியபடி புதுச்சேரியில் கரோனா விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகிறாா்.
புதுவை கல்வித் துறை நுண்கலை ஆசிரியா் பா.பச்சையப்பன், மிதிவண்டியில் ஒலிப்பெருக்கியைக் கட்டிக் கொண்டு, துண்டு பிரசுரங்கள் வழங்கியபடி புதுச்சேரியில் கரோனா விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகிறாா்.
இதன் தொடக்க நிகழ்ச்சி புதுச்சேரி கோரிமேடு காசநோய் மருத்துவமனை வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. புதுவை சுகாதாரத் துறை செயலா் டி.அருண் தொடக்கிவைத்தாா்.
நிகழ்வில் பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் (பெண் கல்வி) நடனசபாபதி, பத்மஸ்ரீ வி.கே.முனுசாமி, சுகாதாரத் துறை இயக்குநா் எஸ்.மோகன்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.