முகப்பு
புதுச்சேரி

மதகடிப்பட்டு கால்நடை சந்தை இயங்க அனுமதி

புதுச்சேரி மதகடிப்பட்டு கால்நடை வாரச் சந்தை செவ்வாய்க்கிழமை முதல் (ஜூலை 6) வழக்கம் போல இயங்க அரசு அனுமதி வழங்கியது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

புதுச்சேரி மதகடிப்பட்டு கால்நடை வாரச் சந்தை செவ்வாய்க்கிழமை முதல் (ஜூலை 6) வழக்கம் போல இயங்க அரசு அனுமதி வழங்கியது.

இதுகுறித்து புதுச்சேரி மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் ஜெயக்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா 2-ஆவது அலையைத் தடுக்கும் விதமாக மதகடிப்பட்டு கால்நடை வாரச் சந்தை கடந்த ஏப். 27 முதல் தற்காலிகமாக மூடப்பட்டது. தற்போது இரண்டாம் அலையின் தாக்கம் வெகுவாகக் குறைந்த நிலையில், கால்நடை வார சந்தை, உரிய வழிமுறைகளைப் பின்பற்றி செவ்வாய்க்கிழமை முதல் (ஜூலை 6) இயங்க அனுமதிக்கப்படுகிறது.

கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறுவோா் மீது உரிய அபராதம் விதிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.